தல-58 படத்தின் இயக்குனர்? கதை என்ன தெரியுமா? – வைரலாகும் தகவல்.!

தல அஜித் இறுதியாக வெளியான விவேகம் படத்தினால் தோள்பட்டையில் அடிபட்டு சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

இவருடைய அடுத்த படத்தை யார் இயங்குவார்கள்? கதை என்னவாக இருக்கும் என பல கேள்விகள் ரசிங்கர்களுக்கு உள்ளே ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவாவே அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் தல-58 படம் போலீஸ் கதையை மையமாக கொண்ட படம் எனவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

டார்லிங் பிரபாஸுக்கு அனுஷ்கா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் டார்லிங்கான பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஸ்கா நடித்திருந்தார்.

நேற்று பிரபாஸ் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார், இவருடைய ரசிகர்கள் பிரபாஸ், ஹாப்பி பர்த்டே பிரபாஸ், டார்லிங் பிரபாஸ் என்றெல்லாம் ட்விட்டரில் ட்ரெண்டு செய்து அவருக்கு வாழ்த்துகளை கூறி வந்தனர்.

இந்நிலையில் அனுஷ்கா பிரபாஸுக்கு அளித்த பிறந்த நாள் பரிசு என்ன என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பிரபாஸுக்கு கை கடிகாரம் என்றால் மிகவும் பிடிக்குமாம், இதனால் அனுஸ்கா அவருக்கு அழகான கை கடிகாரத்தை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார்.

மேலும் பிரபாஸ் தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக சாஹா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனரின் படத்தில் கமிட்டான நயன்தாரா – குஷியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நயன்தாரா, ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது பிரபல இயக்குனரான அறிவழகன் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இது நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!

மலையாள திரையுலகில் ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களையும் கவர்ந்தவர் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவி.

இவருடைய மலர் டீச்சர் கதாபாத்திரம் பலரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் இவரை அப்படியே அழைக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் இவரை பற்றி சமீபத்தில் தெலுங்கு பத்திரிக்கை ஒன்றில் இவரை மலையாளி எனவும் இவர் தமிழ் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியிட்டு இருந்தது.

இது பற்றி மனம் திறந்த சாய் பல்லவி தயவு செய்து என்னை மலையாளினு அடையாளப்படுத்தாதீங்க, நான் கோயம்பத்தூரில் பிறந்த தமிழச்சி என கூறியுள்ளார்.

மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் – தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

தளபதி விஜயின் மெர்சல் இந்திய தேசத்தையே மிரள வைத்து விட்டது, இதில் கூறப்பட்டுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அதே போல் இந்த படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசி இருப்பதும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனை பற்றி பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி அவரது ட்விட்டர் பக்கத்தில் மிரட்டும் மெர்சல் மிரளும் தேசம், மீட்போம் உரிமையை காப்போம் தமிழனை என அதிரடியாக ட்வீட் செய்துள்ளார். இவருடைய இந்த டீவீட்டை பலரையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.